முச்சந்தி
சிரியாவில் யாசிடி மக்களின் அவலநிலை: நூற்றாண்டுகளாக தொடரும் இனப் படுகொலை!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

இன்று வரை, அவர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் மரபுகளில் மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து வலுவாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அதனாலேயே உலகில் விரைவாக அழிக்கப்படும் ஆதி இனமாகி உள்ளனர்.
சிரிய யாசிடி மக்கள்:
சிரியாவில் உள்ள யாசிடி மக்கள் (Yazidis) முக்கியமாக வடக்கு சிரியாவில், குறிப்பாக அஃப்ரினின் குர்த்-தாக் (Kurd-Dagh) மற்றும் அல்-ஜசிரா (Al-Jazirah) பகுதிகளில் வாழும் ஒரு பண்டைய சிறுபான்மை குர்தி மொழி பேசும் குழுவினர் ஆவார்.

2014-ல் ISIS படையெடுப்பு மற்றும் தற்போதைய துருக்கிய ஆதரவு சிரியப் படைகளின் ஆக்கிரமிப்பால், இவர்கள் இனப்படுகொலை, இடம்பெயர்வு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு, சுமார் 12,000 முதல் 15,000 பேராகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா யாசிடி மக்களின் மத நம்பிக்கை, மற்றய அரபு மக்களில் இருந்து மக் வேறுபட்டது. தற்போது யாசிதிகள் குர்தி மொழி பேசும், இஸ்லாமிய மற்றும் பண்டைய உள்ளூர் மரபுகளைக் கலந்த ஒரு தனித்துவமான சமரச மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவார்கள்.
ஆரம்ப காலத்தில் 1963இல் சுமார் 10,000-மாக இருந்த சமூக எண்ணிக்கை, 2014-ல் 50,000-மாக உயர்ந்து, பின் போர்கள் காரணமாக தற்போது 12,000-15,000 வரை குறைந்துள்ளது. 2014 முதல் ISIS-ன் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இவர்கள், தற்போது வடமேற்கு சிரியாவில் துருக்கிய ஆக்கிரமிப்பால் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி, AANES (Autonomous Administration of North and East Syria) கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தஞ்சமடைந்து வாழ்ந்தனர்.
தற்போது அங்கு மீண்டும் இஸ்லாமிய ISIS படைகள் தலையோங்கி வருவதால் இந்த மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 2014 காலகட்டத்தில் பல துன்புறுத்தல்களை சந்தித்தனர். யாசிடி பெண்களைக் கடத்துதல், அவர்களின் புனிதத் தலங்களை இடித்தல் மற்றும் மத அடையாளத்தின் காரணமாகக் குறிவைக்கப்படுவது தொடர்ந்து பிரச்சனையாக உள்ளது.
சிரியாவில் பத்தாண்டுகளாக நீடிக்கும் வன்முறைகளுக்குப் பிறகும், ஐக்கிய நாடுகள் சபை இவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்கப் போராடி வருகிறது, மேலும் பல யாசிடிகள் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். ஆனாலும் தற்போதைய நிலை இன்னும் மோசமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
உலகில் யாசிடி மக்கள்:
யாசிடி மக்கள் குர்தி மொழி பேசுவதுடன், சியா, சூபி இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளடக்கிய நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர். யாசிடி மக்கள் ஈராக்கில் நீண்ட காலமாக பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை இனமாவர்.

உலகில் மொத்தம் 15 இலட்சம் யாசிடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் வட ஈராக்கின் சிஞ்சார் மலைப்பகுதியிலும் அதைச்சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்றனர். யாசிடி இன மக்களில் ஈராக்கில் 850,000 , ஜேர்மனியில் 200,000, சிரியாவில் 60,000, ரஷ்சியாவில் 70,000 , ஆர்மீனியாவில் 60,000 , ஜோர்ஜீயாவில் 20,000 சுவீடனில் 7,000 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
பல நூற்றாண்டு ஒடுக்குமுறை :
யாசிடி மக்கள் பெரும்பாலும் தொன்மைய அசிரியாவின் பகுதியாகவிருந்த வடக்கு ஈராக்கின் நினேவெ மாநிலத்தில் நீண்ட காலமாக வாழ்ந்தனர். ஐரோப்பாவிற்கு, குறிப்பாக ஜெர்மனிக்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து ஆர்மீனியா, ஜோயார்சியா மற்றும் சிரியா நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.
யாசிடி மக்களை “சாத்தானை வழிபடுவோர்” என பல நூற்றாண்டுகளாக ஈராக்கில் ஒடுக்கி வந்துள்ளனர். இத்தகைய ஒடுக்குதல் ஈராக்கில் முன்னர் சதாம் உசேனாலும் பின்னர் அடிப்படைவாத சுன்னி இசுலாம் புரட்சியாளர்களாலும் இன்னமும் தொடர்கின்றது.
2014 ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் :
ஈராக்கில் ஆகஸ்ட் 2014 ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் யாசிடி சமூகத்தின் மையப்பகுதியான சின்ஜார் மலையின் அடிவாரத்தில் தொடங்கியது. அவர்கள் யாசிடிகளை ISIS இன் அரசியல்-மத நிலையில் வரவேற்கப்படுவதில்லை. 2007இல் கூட அவர்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் குண்டுவைத்து 800க்கும் மேற்பட்ட யாசிடிக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் 2014 இல்
ஐ. எஸ். இயக்கத்தினரால் இவர்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடியவர்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை ஐ. எஸ். அமைப்பினரால் கொல்வதற்காக சுற்றி வளைக்கப்பட்டு பின் ஐ.நா தலையீட்டால் விடுவிக்கப்பட்டனர்.
இராக்கில் ஆகஸ்ட் 2014 சுன்னி கிளர்ச்சிக்குழுவான இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளின் வன்முறையிலிருந்து தப்ப , யாசிடி இன மக்கள் தங்கள் சொந்த ஊரான சிஞ்சாரை விட்டு வெளியேறினர்.
இராக் வன்முறையிலிருந்து தப்பியோடும் யாசிடி மக்கள் ஆயிரக்கணக்கானோர் சிரியா எல்லைக்கருகே உள்ள சிஞ்சார் மலையின் வறண்ட முகடுகளில் தஞ்சம் புகுந்தனர். சிலர் நடந்தே சிரியா எல்லையைக் கடந்திருக்கின்றனர். தங்கள் சொந்த ஊரான சிஞ்சாரைப் பிடித்த, இராக்கின் கிளர்ச்சிக்குழுவான இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் செய்யும் வன்முறையிலிருந்து தப்ப இடம்பெயர்ந்தனர்.

பயத்தில் தப்பியோடும்போது பல குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்தனர்.
தங்கள் குடும்பத்தில் பிரிந்துவிட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அவர்களுக்கு தெரியவில்லை.இந்தப் பகுதியில், சிறுபான்மை யாசிடி சமூகத்தினருக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் நடந்ததாக அன்றைய தகவல்கள் கூறுகின்றன. தப்பியோடும் யாசிடி இனக் குழந்தைகள் மலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
பாலியல் தொழில் அடிமைகளாக :
பெண்கள் மற்றும் குழந்தைகள் வேறு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுடைய நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பெரும் குவியலில் சேர்த்து கொள்ளையிட்டனர். மிக கொடூரமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் 13 வயது முதல் 16 வயது வரையிலான திருமணமாகாத சிறுமிகளைத் தேர்ந்தெடுத்து பிரித்தனர். எஞ்சியவர்கள் வேறொரு கிராமத்திற்குச் செல்ல திருமணமான பெண்கள் மற்றும் குழந்தைகள் அகதி முகாம்களில் தங்கி
இருந்தனர்.
இருந்தனர்.திருமணமாகாத இளம் பெண்களைத் ஐஎஸ் தேர்ந்தெடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர். இளம் பெண்கள் ISIS போராளிகளுக்கு விற்கப்பட்டார்கள். அத்துடன் பாலியல் தொழில் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஐஎஸ் அமைப்பினர்
பல பெண்கள் வதைத்து, அடிக்கப்பட்டு பட்டினி கிடக்கப்பட்டார்கள்.
அத்துடன் சிறுவர்கள் பயிற்சி முகாம்களுக்கு அழைத்து சென்று, முஸ்லீம் பெயர்களைக் கொடுத்து, பயிற்றுவித்தனர். எஞ்சியிருந்த ஆண்களை கொன்றனர். தற்போது
சின்ஜாரில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். புதைகுழிகளைக் கண்டுபிடித்து படுகொலையின் உண்மையான தன்மையை உலகம் உணர்ந்து உள்ளது.
சின்ஜார் படுகொலை நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் 200 000 யாசிடிகள் இன்னும் காணவில்லை. அவர்கள் உண்மையில் காணாமல் போயிருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை மற்றும் மக்கள் சின்ஜாருக்குத் திரும்புவதற்கான நம்பிக்கை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது.
யுத்த ஆயுதமாக பாலியல் வன்முறை
நதியா முராத் வடக்கு ஈராக்கில் உள்ள யாசிடி சிறுபான்மையினரின் உறுப்பினராக உள்ளார். அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் தொலைதூர கிராமமான கொச்சோவில் வசித்து வந்தார். ஆகஸ்ட் 2014 இல் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) சிஞ்சர் மாவட்டத்தின் கிராமங்கள் மீது மிருகத்தனமான, திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது. இது யாசிடி மக்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது.

நதியா முராட்டின் கிராமத்தில், பல நூறு பேர் படுகொலை செய்யப்பட்டனர். வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட இளைய பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக நிறுத்தப்பட்டனர். ஐ.எஸ்ஸின் கைதியாக இருந்தபோது, நதியா முராத் பலமுறை கற்பழிப்பு மற்றும் பிற முறைகேடுகளுக்கு ஆளானார். இஸ்லாமிய அரசின் வெறுக்கத்தக்க, மனிதாபிமானமற்ற விருப்பிற்கு அவர் மாறாவிட்டால் மரண தண்டனை நிறைவேற்றுவதாக அவரை தாக்குதல் நடத்தியவர்கள் அச்சுறுத்தினர்.
ஐ.எஸ். இராணுவத்தால் கற்பழிப்பு மற்றும் பிற துஷ்பிரயோகங்களுக்கு ஆளான 3000 யாசிடி பெண்களில் நதியா முராத் ஒருவர். பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் கொடுமையானவை. அத்துடன் இது ஒரு இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதி. இவ்வாறு அவர்கள் யாசிடி மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு ஆயுதமாக இதனை பாவித்தனர்.
நீண்டகால கொடுமைகளுக்கு பிறகு நதியா முராத் ஈராக்கை விட்டு தப்பி ஓடினார். தப்பித்ததைத் தொடர்ந்து, அவர் அனுபவித்த கொடூரங்களை பற்றி வெளிப்படையாக பேசத் தேர்வுசெய்தார். இதன்பின் 2016 ஆம் ஆண்டில், தனது 23 வயதில், ஐ.நாவின் முதல் நல்லெண்ண தூதராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
யாசீடி விடுதலை அமைப்பு : கொங்ரா ஸ்டார்
நீண்டகால இடர்களின் பின்னர் 2005இல் யாசீடி பெண்களால் நிறுவப்பட்ட Kongreya Star, அமைப்பானது அவர்களின் விடுதலைக்கு போராடும் கூட்டமைப்பு ஆகும். ஈராக், சிரியா பிராந்திய அரசாங்கங்கள் யாசிடிகளின் பாதுகாப்பிற்காக எதுவும் செய்யவில்லை என்று கொங்ரா ஸ்டார் சுட்டிக்காட்டியுள்ளது. யாசிடி பெண்கள் மற்றும் ஆண்களின் தியாகத்தால் தன்னாட்சி நிர்வாகம் நிறுவப்பட்டது.யாசிடிகளின் கோங்க்ரா ஸ்டார் அமைப்பின் தன்னாட்சி நிர்வாகம் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தனர். 2005 இல் யாசிடிகளால் நிறுவப்பட்ட Kongreya Star, ரோஜாவாவில் உள்ள பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகும். பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பணி “பெண்களின் விடுதலை இல்லாமல், உண்மையான சுதந்திரமான சமூகம் சாத்தியமற்றது” என்ற கூற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பொருளாதார வாய்ப்பு மற்றும் மேம்பாடு, பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பெண்கள் கட்டமைப்பை ஒழுங்கமைப்பதில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. ரோஜாவா மற்றும் சிரியா முழுவதும் பணிபுரியும் கொங்ரா ஸ்டார் முழு மத்திய கிழக்கிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அத்துடன் முழு பிராந்தியத்திலும் பெண்களின் விடுதலைப் புரட்சியை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
![]()