திருமலையில் பிக்குகளைக் கைதுசெய்த அரசுநீர்கொழும்பில் வண.பிதாவைத் தாக்குகிறது

திருகோணமலையில் பெளத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கிறிஸ்தவ மதகுரு மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்
பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கிறிஸ்தவ மதகுருவான மிலான் பியதர்ஷனவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினாய் அவர் மேலும் தெரிவிக்கையில்
கிறிஸ்தவ மதகுருவை சில பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பூசைக்காக கத்தோலிக்க தேவஸ்தானத்தை நோக்கிச் செல்லும் போது கிறிஸ்தவ மதகுருக்கள் அணியும் ஆடை தெளிவாக தெரிவது உறுதியான நிலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை எனக் கூறி மோசமான முறையில் தாக்கியுள்ளனர். தலைக்கவசத்தாலும் அடித்துள்ளனர்.
நீங்கள் மதகுருவுக்கான ஆடைகளை அணிந்துகொண்டு இவ்வாறான செயல்களை செய்வதாக கூறியே பொலிஸார் தாக்கியுள்ளனர். எமது மதத் தலைவர்கள் பிழையான செயல்களில் ஈடுபடுவதில்லை. வாழ்க்கையில் நல்லமுறையில் சரியான வழியில் எவ்வாறு வாழ்வது என்பதையே போதிக்கிறார்கள். அப்படிப்பட்ட சமயத் தலைவர்களை தாக்குவது பயங்கரமானது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை பிடிப்பதாக கூறியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆனால் சூத்திரதாரிகளை பிடிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தி மதத் தலைவர்களை கட்டுப்படுத்துவதாக இருந்தால் அதனை நாம் கண்டிக்கிறோம்.
திருகோணமலையில் பெளத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பாக சமூகத்தில் கருத்துப் பறிமாறல்கள் நடக்கின்றன. தற்போது பொலிஸ் தாக்குதலுக்கு கிறிஸ்தவ மதகுரு உள்ளாகியுள்ளார். அரசாங்கம் தலையிட்டு நீதி, நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()