பலதும் பத்தும்

பெட்டிகளை எடுத்துச் செல்ல ஓட்டுநர் இல்லா வாகனங்கள்

சாங்கி விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் தானியக்க வாகனங்கள்  அறிமுகமாகியுள்ளன.ஆளின்றி இயங்கும் வாகனங்களைக் களமிறக்குவது இதுவே முதல் முறை.

சிங்கபூர் பிரதியமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) வாகனங்களை அறிமுகம் செய்தார். மூப்படையும் ஊழியரணியின் சுமையைக் குறைக்கப் புதிய முயற்சி உதவும் என்றார் அவர்.

மோசமான வானிலை காரணமாகச் சேவைத் தடங்கல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் வாகனங்கள் கைகொடுக்கலாம் என்றார்

வாகனங்களின் சோதனை ஓராண்டுக்கு நடந்தது; 5,000க்கும் அதிகமான சோதனைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.வாகனங்களில் கேமராக்களும் உணர்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

250 மீட்டர் தொலைவில் இருப்பவற்றை வாகனங்களால் கண்டறிய முடியும். அதன்படி பாதையில் இடையூறு தென்பட்டால் அதைத் தவிர்த்து விலகிச் செல்ல முடியும்.

பணியாளர்கள் வாகனங்களைக் கவனிப்பார்கள்; தேவை இருந்தால் செயல்பாட்டில் தலையிடுவார்கள். அவர்கள் வாகனம் ஓட்டுவதிலிருந்து விடுபட்டு மற்ற வேலைகளைச் செய்யலாம். வாகனங்கள் தற்போது முனையம் ஒன்றிற்கும் நான்கிற்கும் இடையே சேவையாற்றுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *