பலதும் பத்தும்

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதியதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் சுமார் 10 வீதம் பேர், அதாவது சுமார் 123 பேர், 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட எட்டு வீதம் பேர் ஏற்கனவே நோயறிதலின் போது குறைபாடுகளை உருவாக்கியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், “தேவையான அனைத்து சிகிச்சை முறைகளும் அரசு வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படுவதுடன், சிகிச்சை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button