விசேட தினங்களில் ஒன்றாகிவிட்ட வணக்கம் ஐரோப்பா 2026… ஏலையா க.முருகதாசன்

ஜேர்மனியில் ஜனவரி முதலாந் திகதி என்றவுடன் வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் ,அதற்காக நேரமொதுக்கி,ஜேர்மனியில் எவ்வளவு தூரத்திலிருந்தும் அதைக் கண்டுகளிக்க வேண்டுமென்ற ஆசையுடன் வரும் மக்களைக் கொண்ட நிகழ்ச்சியாக வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சி மக்களின் மனதில் பதிந்துவிட்டது.
2026 ஆண்டுத் தொடக்கமான இம்முறையம் ஓபகவுசன் நகரிலேயே இவ்விழா நடைபெற்றது.ஓபகவுசன் நகரிலேதான் இவ்விழா ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
பார்ப்போரைப் பரவசப்படுத்தி இரசிக்க வைக்கும் நிகழ்ச்சிகளாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இவ்விழாவில் மேடையேறியிருந்தன.

ஜேர்மனயிலிருந்து பல ஆடல் பாடல் குழுக்களும் பிரானஸ் டென்மார்க்க சுவிஸ் பொன்ற நாடுகளிலிருந்தும் ஆடல் பாடல் குழுக்கள் பங்குபற்றியிருந்தன.
வருடா வருடம் தென்னிந்தியத் தொலைக்காட்சிப் பாடல் போட்டிகளில் பங்குபற்றுபவர்களை இலங்கையிலிருந்து அழைப்பது போல இம்மறையும் விஜய் தொலைக்காட்சியில் பங்குபற்றிய பிரியங்கா என்பவரையும் சீ தமிழில் பாடிய தராங்கினி என்பவரையும் விழாக்குழுவினர் அழைத்திருந்தனர்.
ஒரு விழாவை நடத்துவது என்பது சாதாரண விடயமல்ல,பலவிதமான தடைகள் சிரமங்களைக் கடந்தும் சகிப்புத்தன்மையுடனுந்தான் விழாவை நிறைவு செய்ய வேணும்
விழாவில் கலைநிகழ்ச்சிகளை மேடையேற்றிய அனைவரின் பெயர் விபரங்களையும் என்னால் சேகரிக்க முடியவில்லை என்பதால் அக்குழுக்களின் பெயர்கள் இப்பதிவில் இடம்பெறவில்லை என்பதை மனநெருடலுடன் அறியத் தருகின்றேன்.
ஒரு பெரும் விழாவை மேடையேற்றுவதென்றால் அதுபற்றிய சிந்தனையும் அப்பப்ப அதில் ஈடுபடுபபவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல்,ஆலோசனைகள் ,அபிப்பராய பகிர்வு என்பன அது ஆண்டின் தைமாதத்திலிருந்தே ஆரம்பித்துவிடும்- இந்த விழாவைச் செய்து முடித்தவர்களை வழிதெருவிலோ சந்திக்கும் பொதுமக்களும் அடுத்த விழா எங்கே நடத்தப் போகிறீர்கள்,ஏனென்றால் இப்பொழுது நடைபெற்ற விழா மண்டபக் கதிரைகளில் வசதியாக ஆறஅமர முடியவில்லை என்று தமது எண்ணங்களைச் சொல்வதற்கும் சாத்தியம் உண்டு.
மக்களின் மனநிலையை நன்குணர்தல் என்பது விழாவை எற்பாடு செய்பவர்களின் உளவியல் அணுகுமுறை என்பதால்தான் இவ்விழாவின் ஏற்பாட்டாளர்களின் ஒருவரான திரு.நயினை சூரி அவர்கள் அன்றைய தினமே ஆறஅமர விழாவைக் கண்டுகளிக்கக்கூடிய இருக்கைகளைக் கொண்ட மண்டபம் ஒன்றில்தான் அடுத்த ஆண்டு வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சி நடைபெறும் என்பதை மேடையிலேயே சபையோருக்குக் கூறியிருந்தார்.
பரபரப்பான வாழ்வியல் நகர்வில் மகிழ்ச்சியான தருணங்கள் மூலமாக தம்மை ஆறுதல்படுத்திக் கொள்ளவே மக்கள் விரும்புவார்கள்.அதற்கு இத்தகைய விழாக்கள் முக்கியமானவையே.
கோப்பி தேநீரைப் பருகிச் சுவைத்துக் கொண்டும்,பலகார,உணவு வகைகளைச் சுவைத்தபடியும் தமது குடும்பத்தினருடனும்,உறவினர் நண்பர்களுடனும் இன்னும் நண்பர்கள் நண்பிகளுடனும் கலகலப்பாக சிரித்து மகிழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த விழாக் குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் மகிழுகிறேன்.

2027 ஜனவரி முதலாந் திகதி சீக்கரமே வராதா என ஏங்க வைக்கும் நாளாக இந்நாளை திரு.நயினை சூரி அவர்கள் பபா என மற்றவர்களால் உரிமையுடனும் பாசத்துடனம் அழைக்கப்படும் திரு.ஞானராஜ் அவர்கள்;,திரு.தேவன் தேவகுமார் அவர்கள்,திரு.கெங்கன் அவர்கள்,திரு.இரவீந்திரன் வெற்றிவேல் அவர்கள் என விழாக் குழுவினர் சதா இந்த விழாப்பற்றிச் சித்தித்து விழாவைச் சிறப்பாக நடத்தி நிறைவு செய்திருந்தனர்.அவர்களுக்கு எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்வதுடன் அடுத்த வருடம் இன்னும் சிறப்பகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இவ்விழா நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கியவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.பிரான்சிலிருந்து வந்து அறிவிப்பாளராக மனம் கொள்ளத்தக்கவகையில்;; செய்த திரு.கந்தசாமி கிருஷ்ணா அவர்களையும் ,சுவிஸிலிருந்து வருகைதந்து திறம்பட அறிவிப்பினைச் செய்த திருமதி.நிகேதா ரேகன் அவர்களையும் பாராட்டியும் வாழத்தியும் மகிழுகின்றேன்.
பார்வையாளர்களைக் கவர வேண்டும்,அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்றால் நிகழ்ச்சிகள் யாவும் மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும். அது போன்றுதான் மேடையில் நிகழ்ச்சிகளைப் பற்றி தொகுத்து வழங்குதலுமாகும்.ஒலிவாங்கியில் பேசினால் சத்தம் வருந்தானே எனச் சிலர் நினைப்பதுண்டு.
தொகுத்து வழங்குதல் அறிவிப்புச் செய்தல் எனபதும்,சொல்வதைக் காதுகள் கேட்டால் போதுமென்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள்.
அறிவிப்ப ஒரு சுவையான கலை மேடையில்: ஒரு அறிவிப்பாளர் நிற்கும் போது அவரின் உடல் மொழி மேடை முழுவதையும் அவர் பயன்படுத்தும் முறை,ஒலி வாங்கியை அவர் தனது குரலின் அடர்த்திக்; கேற்ப பயன்படுத்தும் முறை,ஒரு நிகழ்ச்சி பற்றி அறிவித்த முறையை, பயன்படுத்திய சொற்களை இன்னொரு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தாது தவிர்க்கும் ஆளுமை இவை அறிவிப்புத்துறைக்கு முக்கியமானதுதாகும்.
வணக்கம் ஐரோப்பா நிகழ்ச்சியில்,நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திரு.கந்தசாமி கிருஷ்ணா அவர்களும்,திருமதி.நிகேதா ரேகன் அவர்களும் மேலே குறிப்பிட்ட அத்தனையைம் கையாண்டு அறிவிப்பினைச் செய்தார்கள் என்பதற்காக அவர்களிருவரையும் வாழ்த்தியும் பாராட்டியும் மகிழ்கிறேன்.
மேடையில்: நிகழ்ச்சிகளைத் தொய்வின்றி மேடையேற்றுவதில் அதே இலக்காக எவரின் சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் அதை நிர்வகித்த திரு.செல்வநாதன் சுமித்திரன் அவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்.அவரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன்.வருடா வருடம் அவர் தனது பணியை சிறப்பாகவே செய்து வருவதை நான் அவதானித்து வருகிறேன்.
ஒரு நிகழ்ச்சிக்கும் அடுத்த நிகழ்ச்சிக்குமிடையில் மக்களின் பொறுமையைச் சோதிக்காமல் இருக்க வேண்டும்.வேகம் வேகமாக நிகழ்ச்சிகளை மேடையேற்றுதல் என்பதில் திரு.செல்வநாதன் சுமித்திரன் பாரபட்சம் பார்க்காத கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பது உண்மையே.
தரமான நிகழ்ச்சிகள்,மனதை கொள்ளையடிக்கும் நிகழ்சித் தொகுப்பு,சிறந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,சுவையான தேநீர்,கோப்பி, உணவு,களைப்பைப் பொருட்படுத்தாமல் பொறுமையாகப் பதில் சொல்லும் விழா ஏற்பபாட்டாளர்கள்,சொன்னதைச் செய்கின்ற உதவியாளர்கள் என வணக்கம் ஐரோப்பா 2026 சிறப்பாக இடம்பெற்றிருந்தது,அனைவருக்கும் வாழ்த்துகள்.-
![]()