கவிதைகள்
சொர்க்கத்தின் சூட்சுமம்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

மாயவரம் மந்திர மூர்த்தி அடிகளார்
மார்கழி மாதம் மறைந்தார் என்றனர்
மனம் மகிழ்ந்து போனேன்- ஆனால்
அம்மாதம் மறைந்தவர் அனைவருமே
சொர்க்கம் செல்வார்கள் என்றனர்
வைகுண்ட ஏகாதேசியாம் அந்நாளில்
சொர்க்கவாசல் நுழைந்தால் – சொர்க்கம்
உண்டென்றதால் ஒருமுறை சென்றேன்
ஆண்டுதோறும் புதிப்பிக்க வேண்டுமாம்
பகவானை தரிசித்து வந்தால் – அவனின்
பாதமடையலாம் என்று சொன்னார்கள்
கால்கடுக்க மலையேறி நான் வணங்கினேன்
தொங்கூர்தியில் வந்தவனும் அங்கு நின்றான்
போனபிறவி செய்த பாவத்தால் நீ நடந்தாய்
செய்த புண்ணியம் தொங்கூர்தியாய் சுமந்தது
வத்தலக்குண்டு வரதனார் இப்படி சொன்னார்
யாதொன்றும் யான் அறிந்திலனே பராபரமே!

![]()