முச்சந்தி

கொட்டகலையில் மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மலையக தியாகிகள் தினம் சனிக்கிழமை காலை (10) மிகவும் உணர்வுப்பூர்வமாக கொட்டகலையில் நினைவுகூரப்பட்டது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வானது பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமர்சல் லேக் மைதானத்தில், பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வளர்கள், ஆன்மீக தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலையக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தியாகிகளை நினைகூர்ந்து பொதுநினைவுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து அமைச்சின் உறுப்பினர்கள், சிவில் அமைப்பு மற்றும் அரசியல் இயக்கங்களின் பிரிதநிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

1939 டிசம்பர் இறுதியல் ஆரம்பமாகி 1940 ஜனவரிவரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

1940 ஜனவரி 10 ஆம் திகதி முல்லோயா கோவிந்தன் உயிரிழந்திருந்ததுடன், அதன் பின்னர் தொடர்ச்சியாக மலையக பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களால் பலர் உயிரிழந்தனர். இதனால் முல்லோயா கோவிந்தன் உயிரிழந்த தினத்தை மலையக தியாகிகள் தினமாக தொடர்ச்சியாக மலையக மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *