முச்சந்தி
ஈரானில் கொமேனிக்கு எதிராக கோஷங்கள்: அமெரிக்க அச்சுறுத்தலும், இஸ்ரேலிய எச்சரிக்கையும் !… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அதிகரித்து வரும் பணவீக்கம் ஈரான் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. தலைநகர் தெஹ்ரானில் பொருளாதார தேக்கநிலையும் காணப்படுகிறது.
தெஹ்ரானில் தொடர் போராட்டம்:
பணவீக்க சரிவால் அரசுக்கு எதிரான பொது மக்களின் போராட்டம் ஈரான் நாட்டில் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்களை ஒடுக்க அரசு, பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டு உள்ளது. ஒருபுறம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், வன்முறை, போராட்டத்தில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர். இதுபற்றி உள்ளூர் அரசு ஊடகம் மற்றும் மனித உரிமை குழுக்கள் கூறும்போது, பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
ஈரானில் வலுக்கும் போராட்டங்களின் விளைவாக பரவிய வன்முறையில்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரான் நாணயத்தின் மதிப்பு 32,000 ரியாலாக கடந்த 2015 ஆண்டில் சரிந்தது. அது மென்மேலும் சரிந்து இப்போது 1.4 மில்லியன் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ரியால் மதிப்பு சரிவு 40 முதல் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.ரியால் மதிப்பு சரிவு, பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. இதனால் பால், தானியங்கள் போன்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எழுபது வீதம் அதிகரித்தது. இதுதான் சாமானிய மக்களை வீதிகளுக்குத் தள்ளியுள்ளது. எற்கெனவே மாஷா அமினிக்கு எதிரான போராட்டத்திலேயே உயிரை துச்சமென நினைத்து போராடிய இளைஞர்கள் இந்த முறை அதைவிட ஆக்ரோஷமாக அரசுக்கு எதிராக உச்சத் தலைவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் தீவிர போராட்டம் ஏழாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரான் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .
தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன.
இதன்காரணமாக போலீஸாருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக இதுவரை 16 போ் உயிரிழந்துள்ளனா். 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொருளாதார தடையும், தவறான கொள்கையும்:
நீண்ட காலமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஈரானின் நாணயத்தின் மதிப்பை கடுமையாக வீழ்ச்சியடையச் செய்துள்ளன. கடுமையான பணவீக்கம் காரணமாக அதிக மதிப்புடைய நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி வர்த்தக பரிவர்த்தனைகள் கடினமாகி விட்டன.
92 மில்லியன் மக்களைக் கொண்ட பாரசீக நாட்டின் கட்டுப்பாட்டைப் பராமரிக்க ஈரானின் தலைவர்கள் முயல்வதால், பொருளாதாரக் குழப்பம் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தி வருகிறது. 2017 முதல் பொருளாதார ரீதியான பிரச்சினைகள், வறட்சி மற்றும் பிற குறைகளால் தூண்டப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியான விளைவுகளை ஈரான் சந்தித்து வருகிறது.
ஈரானின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு, மோசமான மேலாண்மை முதல் நாட்டின்
பொருளாதாரத்தை மூடி வைத்திருக்கும் கொள்கைகள் வரை காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானின் எண்ணெய் விற்பனையை வெளிநாடுகளுக்கு மட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் ஜூன் மாதத்தில் இஸ்ரேலுடனான போர், இதன் போது அரசாங்கம் ஈரானிய வங்கிகளை அதன் செலவுகளை ஈடுகட்ட பயன்படுத்தியது, ஆகியவை பொருளாதாரம் மோசமடைவதற்கு பங்களித்தன.
பொருளாதாரத்தை மூடி வைத்திருக்கும் கொள்கைகள் வரை காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானின் எண்ணெய் விற்பனையை வெளிநாடுகளுக்கு மட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் ஜூன் மாதத்தில் இஸ்ரேலுடனான போர், இதன் போது அரசாங்கம் ஈரானிய வங்கிகளை அதன் செலவுகளை ஈடுகட்ட பயன்படுத்தியது, ஆகியவை பொருளாதாரம் மோசமடைவதற்கு பங்களித்தன.இந்த நெருக்கடியை விரைவாக நிவர்த்தி செய்ய ஈரான் அரசாங்கத்திடம் சரியான வழிகள் உள்ளனவா என தெரியவில்லை. அமெரிக்காவுடனான உறவை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொருளாதாரத் தடைகள் மீதான நிவாரணத்திற்கு ஈடாக அமெரிக்காவுடனான அதன் உறவை அது மாற்றினால் மட்டுமே ஈரான் மீண்டெழ முடியும். அல்லது அரசாங்க, பாதுகாப்பு செலவினங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும். ஆனால் எந்த வகையிலும் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர் பொருளாதார நெருக்கடி :
போராட்டம் தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்களில் ஆா்ப்பாட்டக்காரா்கள் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனிக்கும் ஈரான் அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கொமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்தால், ஈரான் உச்ச தலைவர்
ரஷ்யாவிற்கு தப்பியோட முயற்சிப்பார் என்ற தகவலை மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டில் மாஷா அமீனி என்ற பெண் தலையை துணியால் மறைக்காமல் இருந்ததற்காக கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்டு, காவலில் உயிரிழந்ததைக் கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் வெடித்தன. இதில் 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் உயிரிழந்தனா். அதற்கு அடுத்தபடியாக ஈரானில் வெடித்துள்ள மிகப் பெரிய போராட்டம் இது என்று கூறப்படுகிறது.கொமேனிக்கு எதிராக கோஷம்:
தற்போதய பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தோடு, ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயோதுல்லா அலி கொமேனிக்கு எதிராகவும் அதிருப்தி அலைகள் வலுத்துள்ளன. ஈரானின் 21 மாகாணங்கள் போராட்டத்தால் பற்றி எரிகின்றன. நாடெங்கும் கொமேனிக்கு சாவு, கொமேனிக்கு வெட்கம் போன்ற முழக்கங்கள் வலுத்துள்ளன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த, அதிகாரமிக்க இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையான இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படைகளையும் எதிர்க்க பொது மக்கள் துணிந்துவிட்டனர். இந்தப் படை ஈரானின் உயர் தலைவர் கொமேனியுடன் நேரடி தொடர்பு கொண்ட படை. இதற்கு முந்தைய போராட்டங்களில் இப்படை வந்தால் அமைதியாக இடத்தை காலி செய்யும் மக்கள் இந்த முறை அதைச் செய்யவில்லை. கொமேனியை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கின்றனர்.
மேலும் அரசு அலுவலகங்களை சூறையாடுவது, கொமேனியின் சிலையை நொறுக்கி வீழ்த்துவது என போராட்டக்காரர்கள் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க எச்சரிக்கை:
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்மை தொடர்பில் ஈரான் கவனம் செலுத்த வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தால் உலகை அச்சுறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இஸ்ரேலும் ஈரானும் மோதலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரானிய அணுசக்தி இலக்குகளைத் தாக்கி அவற்றை அழிப்பதன் மூலம் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவியது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை பல ஆண்டுகளாக பின்னுக்குத் தள்ளியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஈரானில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரானிய அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஆனால் ஈரானியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்வதை அமெரிக்க அரசு ஊக்குவித்து வருகிறது என்று ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ஈரான் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்றும், தாம் இந்த விடயத்தில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஈரான் வன்முறையை
நிகழ்த்தினால், அமெரிக்கா தலையிடும். நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
நிகழ்த்தினால், அமெரிக்கா தலையிடும். நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தால் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி ரஷ்யாவிற்கு தப்பிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவும் ஈரானும் நெருங்கிய நட்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()