இலங்கை

யாழ்.நாக விகாரை விகாராதிபதியும் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு; ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அறிவிப்பு 

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி , பொது மக்களின் காணி என நீதி அமைச்சர் , ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்புக்களுக்கு நான் தெளிவு படுத்தியுள்ளேன்.

இந்த பிரச்சனையை அரசியலாக்கி முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம் என தமிழ் , சிங்கள மக்களிடம் கோருகிறேன். காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.

அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை எனத் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *