உலகம்

தென்கொரியா புதிய சட்டம் ; பொய் செய்தி வெளியிட்டால் கடும் தண்டனை

தென்கொரியாவில் பொய் தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரியாவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லீ ஜே மியுங் தலைமையிலான அரசு சர்ச்சைக்குரிய இச்சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

செய்தி நிறுவனங்களும், யூடியூப் சேனல்களும், சட்டவிரோதமானதும், பொய்யானதுமான தகவல்களை, தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கும் வகையிலான விதிகள் அச்சட்ட ஏற்பாட்டில் உள்ளக்கட்டப்பட்டுள்ளது.

இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக அபராதம் விதிக்கப்படவும் அந்த சட்டம் வழிவகுக்கிறது. அத்துடன் கடுமையான சிறை தண்டனை உள்ளிட்டவைகளும் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *