இலங்கை
மலையக கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மலையக தலைவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோரும் இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் அங்கிருந்தார்.
![]()