முச்சந்தி

வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்தோனேசிய படுகொலை: கம்யூனிச களையெடுப்புக்கு இரு மில்லியன் மக்கள் பலி!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(வரலாற்றில் மறைக்கப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான இந்தோனேசியாவில் 1965-66 வெகுஜன படுகொலை கருதப்படுகிறது. தென்னாசிய நாடுகளில் கம்யூனிசத்தின் பரவலைத் தடுத்து, ஆசிய நாடுகளை தங்கள் செல்வாக்கின் எல்லைக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்த மேற்கத்திய உலகும், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இணைந்தே இந்தோனேசியாவில் பாரிய கம்யூனிச களையெடுப்பு நடத்தியது)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டச்சு ஆதிக்கம் இந்தோனேசிய எல்லைகளுக்கும் விரிவடைந்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 ஆம் ஆண்டு ஜப்பானிய படையெடுப்பின் விளைவாக டச்சு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இதன் விளைவாக அடுக்கப்பட்ட இந்தோனேசிய சுதந்திர இயக்கம் தீவிரமாக தொடங்கியது. ஆகஸ்ட் 1945 இல் ஜப்பான் சரணடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேசியவாத தலைவர் சுகர்னோ சுதந்திரத்தை இந்தோனேசியாவில் அறிவித்து ஜனாதிபதியானார்.

இந்தோனேசிய படுகொலைகள்:

இரண்டாம் உலக போரின் பின்னரும், நெதர்லாந்து அதன் ஆட்சியை மீண்டும் நிலை நிறுவ முயன்றது. ஆனால் கசப்பான ஆயுதம் மற்றும் இராஜதந்திர போராட்டம் 1949 டிசம்பரில் முடிவுக்கு வந்தது. சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டு டச்சுக்காரர்கள் இந்தோனேசிய சுதந்திரத்தை முறையாக அங்கீகரித்தனர்.

ஆனாலும், இந்தோனேசியாவில் அடக்குமுறையை எதிர்கொண்ட மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். PKI என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. 1965ல் நடந்த ஒரு சதிப்புரட்சியின் விளைவாக இந்தோனேசிய இராணுவம் தலைமையிலான புதிய தலைமை நாட்டை கைப்பற்றியது.

இதன் விளைவாக கம்யூனிச எதிர்ப்பு சுத்திகரிப்புக்கு வழிவகுத்தது. இதில் அரை மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
அப்போதய இராணுவ ஜெனரல் சுகார்டோ அரசியல் ரீதியாக ஜனாதிபதி சுகர்னோவை எதிர்த்து மேலோங்கினார். மார்ச் 1968 இல் ஜனாதிபதியானார். அவரது புதிய ஒழுங்கு நிர்வாகம் மேற்குநாடுகளின் ஆதரவைப் பெற்றது.

நீண்ட கால ஆட்சியால் இந்தோனேசியாவில் அவரது முதலீடு மூன்று தசாப்தங்களாக கணிசமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தது.

இருப்பினும், 1990களின் பிற்பகுதியில், கிழக்கு ஆசிய நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேசியா இருந்தது. இது மக்கள் எதிர்ப்புக்களுக்கு வழிவகுத்தது மற்றும் 1998 மே 21 அன்று சுஹார்டோவின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.

சுஹார்டோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து சீர்திருத்த சகாப்தம், ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த வழிவகுத்தது. ஒரு பிராந்திய சுயாட்சி திட்டம், கிழக்கு திமோரின் விடுதலை மற்றும் 2004 இல் முதல் நேரடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை, சமூக அமைதியின்மை, ஊழல், இயற்கை பேரழிவுகள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை முன்னேற்றத்தை மெதுவாக்கியுள்ளன.

இந்தோனேசிய கொலைக் களம்:

சுஹார்டோவின் கீழ் இந்தோனேசிய இராணுவத்தால் 1965 முதல் 1966 வரை இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் (PKI) உறுப்பினர்களை குறிவைத்து பெரிய அளவிலான கொலைகள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மற்ற குழுக்களில் கம்யூனிஸ்ட் அனுதாபிகள், கெர்வானி பெண்கள், சீன இன மக்கள், நாத்திகர்கள், இடதுசாரிகள் எனக்கூறப்பட்டவர்கள் அடங்குவர்.

அக்டோபர் 1965 முதல் மார்ச் 1966 வரையிலான வன்முறையின் முக்கிய காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுஹார்டோவின் கீழ் இந்தோனேசிய இராணுவத்தால் அட்டூழியங்கள் தூண்டப்பட்டன. இந்தோனேசிய அதிகாரிகள் அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றனர் என்பதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன.

செப்டம்பர் 30 இயக்கத்தின் ஒரு சர்ச்சைக்குரிய சதிமுயற்சியைத் தொடர்ந்து இது கம்யூனிச எதிர்ப்பு சுத்திகரிப்பு ஒன்று தொடங்கியது. மிகவும் பரவலாக வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, குறைந்தது 500,000 முதல் 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சில மதிப்பீடுகள் இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஒழுங்குக்கு மாறுதல் மற்றும் PKI ஐ ஒருஅரசியல் சக்தியாக நீக்குதல், உலகளாவிய பனிப்போரில் தாக்கங்களை ஏற்படுத்தியதில் இந்த தூய்மைப் படுத்தல் ஒருமுக்கிய நிகழ்வாக இருந்தது.

1965இன் இறுதியில் மக்கள் எழுச்சிகள் ஜனாதிபதி சுகர்னோவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் இதுவே சுஹார்டோவின் மூன்று தசாப்த கால சர்வாதிகார ஜனாதிபதி பதவிக்கு வழிவகுத்தது. கைவிடப்பட்ட சதி முயற்சி இந்தோனேசியாவில் அடக்கி வைக்கப்பட்ட வகுப்புவாத வெறுப்பை வெளியிட்டது. இவை இந்தோனேசிய இராணுவத்தால் தூண்டப்பட்டன. இது PKI மீது விரைவாக் குற்றம் சாட்டியது. கூடுதலாக, அமெரிக்கா, ஆங்கிலேய, அவுஸ்திரேலியாவின் புலனாய்வு அமைப்புகள் இந்தோனேசிய கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

பனிப் போரில் இந்தோனேசியா:

பனிப்போரின் போது, அமெரிக்கா, மேற்கத்திய கூட்டாளி நாடுகள் கம்யூனிசத்தின் பரவலைத் தடுத்து, ஆசிய நாடுகளை தங்கள் செல்வாக்கின் எல்லைக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்தனர். ஏனெனில் சுகர்னோவை அகற்றுவதற்கு பிரிட்டன் கூடுதல் காரணங்களைக் கொண்டிருந்தது, ஏனெனில் அவரது அரசாங்கம் முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் காமன்வெல்த் கூட்டமைப்பான அண்டை நாடான மலாயா கூட்டமைப்புடன் அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டது.

இதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் அரசியல், சமூக மற்றும் இராணுவ வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் PKI தானே கலைக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அடுத்த சில வாரங்களில், அக்டோபர் 1965 இல் வெகுஜனக் கொலைகள் பெருமளவில் தொடங்கின. 1966 இல் தலைநகர் ஜகார்த்தாவில்தொடங்கி மத்திய மற்றும் கிழக்கு ஜாவா வரை கொலைகள் பரவியது.

மத்திய ஜாவா, கிழக்கு ஜாவா, பாலி மற்றும் வடக்கு சுமத்ராவின் PKI கம்யூனிஸ்டுகளின் கோட்டைகளில் மிகவும் தீவிரமான கொலைகள் நாடு முழுவதும் நிகழ்ந்தன. மார்ச் 1967 இல், இந்தோனேசியாவின் தற்காலிக பாராளுமன்றத்தால் சுகர்னோ தனது எஞ்சியிருந்த அதிகாரத்தை பறித்தார். மேலும் சுஹார்டோ செயல் தலைவராக மட்டுமே நியமிக்கப்பட்டார்.

சுஹார்டோ ஜனாதிபதியாக:

மார்ச் 1968 இல், சுஹார்டோ முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 ஆம் ஆண்டு சிஐஏ குறிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி, கம்யூனிச எதிர்ப்பு இராணுவ அதிகாரிகளுக்கும் இடையே விரிவான தொடர்புகள் இருப்பது போல, சுகர்னோவை கலைக்கவேண்டும் என்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களின் உயர் மட்டத்தில் ஒருமித்த கருத்து இருந்தது.

ஆனால் அமெரிக்க இராணுவம் இந்தோனேசிய 1,200 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், மூத்த இராணுவப் பிரமுகர்கள் உட்பட ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி, CIA இந்தோனேசியாவில் கொலைகளில் தீவிர ஈடுபாட்டை மறுத்தது.

2017 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க ஆவணங்கள், அமெரிக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே வெகுஜனக் கொலைகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டிருந்தது. இந்தோனேசிய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியது. இந்தோனேசிய கொலைக் குழுக்களுக்கு PKI அதிகாரிகளின் விரிவான பட்டியலை வழங்குவது உட்பட கொலைகளில் சிஐஏ உடந்தையாக இருந்தது. வரலாற்றாசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் இவை நிரூபிக்கப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான வெகுஜன படுகொலைகளில் ஒன்றாக இந்தோனேசியவை வரிசைப் படுத்தப்படுத்தி, 1968 ஆம் ஆண்டு
இரகசிய சிஐஏ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *