இலங்கை

எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

நேற்று இச்சந்திப்பு சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

தமிழக முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *