இலங்கை

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த நபர்  தாவடிப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்தபோது தவறி முதல் மாடியில் விழுந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *