பலதும் பத்தும்
யாழ், மூத்த விவசாயிக்கு ஏராள் வேந்தன் விருது

யாழ்ப்பாணம் – வலிகாமம் பிரதேசத்தை சேர்ந்த மூத்த விவசாயி ஒருவர் ‘ஏராள் வேந்தன்’ எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்துறையில் ஈடுபட்டு வரும் இவரைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்விலே, இவ்விருது வழங்கப்பட்டது.
சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதர் தர்மராசா என்கிற மூத்த விவசாயிக்கே இவ்விருது வழங்கப்பட்டது.அவரது விவசாயத்துக்கு பக்க பலமாக இருந்த அவரின் மனைவிக்கும் சிறப்புக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.கழகச் சிறுவன் ரவிசங்கர் யக்சன் மற்றும் சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தினர் இணைந்து இவ்விருதை வழங்கினர்.
![]()