பலதும் பத்தும்
சுவிஸ் தேசிய கவுன்சிலின் உப தலைவராக இலங்கையர்

சுவிட்சர்லாந்து தேசிய கவுன்சிலின் இரண்டாவது உப தலைவராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாரா ரூமி தெரிவாகியுள்ளார்.
சுவிட்சர்லாந்து பெடரல் பாராளுமன்றத்தில் இத்தகைய உயர்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் முதலாவது இலங்கையர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரா ரூமி எதிர்வரும் வருடத்தின் ஆரம்பப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
34 வயதுடைய தாதியரான பாரா ரூமி,மருத்துவ நிபுணருமாவார்.கொழும்பு பிஷப் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் கொழும்பு, மருதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த முகம்மது ரூமி மொஹிதீன் மற்றும் இஸ்ஃபியா ரூமி தம்பதியினரின் புதல்வியாவார்.
1998 ஆம் ஆண்டில் இவர்,குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.
![]()