உலகம்

ஆஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிசூடு தாக்குதல்; பிரதமர் கடும் கண்டனம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்த மக்களை இலக்கு வைத்து 2 துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்ததுடன் 42 பேர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு IS அமைப்பின் சித்தாந்தத்தை பிரதிபலிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிசூடு தாக்குதல் ; பிரதமர் கடும் கண்டனம் | Shooting Attack Australia Prime Minister Condemns

இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிலவும் வெறுப்பு சித்தாந்தத்தைக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தாக்குதல் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு கவனமாக செயல்படுத்தப்பட்ட தாக்குதல் என்றும் பிரதமர் விவரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *