பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழை; வெள்ள எச்சரிக்கை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் தெற்மேற்குப் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வான்கூவார் பெரும்பாகம், ப்ரேசர் வெலி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை வரையில் சுமார் 70 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல நதிகளில் வெள்ள அபாயம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கடற்கரை பகுதிகளில் பெய்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தை அதிகரித்துள்ளது என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அமைச்சர் கெலி கீரின் தெரிவித்துள்ளார்.
நதி கரைகள் மற்றும் நீர்வழிகளுக்கு அருகே செல்லாமல் இருக்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, சமீபத்திய புயலால் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக மாகாணம் முழுவதும் சுமார் 10,400 வாடிக்கையாளர்கள் மின்சார விநியோகமின்றி உள்ளதாக மாகாண மின் வாரியம் தெரிவித்துள்ளது.
![]()