இயற்கை அனர்த்தத்தில் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாக பாதிப்பு

எதிர்க் கட்சியினரை பார்க்கும் போது எமக்கு கவலையாகத்தான் இருக்கிறது ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவுதை விட்டு மற்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் சமுக வலைத் தளங்களில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் நகர் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொத்மலை பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் சேதமடைந்த வீதிகளையும் சென்று பார்வையிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் கொத்மலை பகுதி பாரிய அளவில் சேதமைடைந்துள்ளது.இதுவரையிலும் பிரதேச மக்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரசியல் பிரமுகர்கள் இணைந்து பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்கள்
.நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதி மண்சரிவில் பாரியளவில் சேதமடைந்துள்ளது பிரதான வீதி சேதமடைந்ததன் காரணமாக புகையிரத வீதி சுமார் 200மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது. அதனை சீர் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மூன்று தினங்களில் வாகனங்கள் செல்வதற்கு குறித்த வீதி திறக்கப்படவிருக்கிறது.
இந்த வீதியின் காரணமாக மக்கள் 750மீற்றர் தூரம் நடந்து சென்று பிறகு பஸ்ஸில் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஆறுகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. மக்கள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். வாழவேண்டும்.ஆறுகள் மற்றும் கால்வாய்களை நாம் முடினால் நஸ்ட ஈடு அனைத்துக்கும் செலுத்தவேண்டி நேரிடும் என்றார்.
இந்த விஜயத்தின் போது கண்டி மாவட்ட எம்.பி. துஷாரி, நுவரெலியா மாவட்ட எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி, வீதி மேம்பாட்டு அதிகாரசபை அதிகாரிகள்,இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
![]()