இலங்கை

யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?

யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது, இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,312 குடும்பங்களைச் சேர்ந்த 51,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இரண்டு வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், அரசாங்கம் சமீபத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்காக 25,000 ரூபா ஒதுக்கியுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 361,475,000 ரூபாய் ஆகும்.

இதில், 1216 வீடுகளுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு 30,400,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கையின்படி, நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 893 ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *