பலதும் பத்தும்

மண் சரிவுப் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு ரேந்தபொல பகுதியில் பாரியளவில் மண்சரிவு இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டார்.

டித்வா புயலின் போது பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டிருந்ததுடன், இவற்றில் வெலிமடை ரேந்தபொலவில் இடம்பெற்ற மண்சரிவில் பெருமளவிலானோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை தொடர்ந்து, மண்சரிவு இடம்பெற்ற குறித்தபகுதிக்கு சென்று அந்த பிரதேசத்தை பார்வையிட்டார்.

இதன்போது அந்த மண்சரிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button