பலதும் பத்தும்

திடீரென உருவான புதைகுழி சட்டென்று விழுந்த கார்கள்

கனமழையால் திடீரென உருவான புதைகுழியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் திடீரென விழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் வியட்நாமின் டா நாங்கில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது. கனமழையை அடுத்து அந்தப் பகுதியிலிருந்த வீதியில் புதைகுழி ஒன்று திடீரென உருவானது.

சுமார் 20 மீற்றர் பரப்பளவு மற்றும் 2 மீற்றருக்கும் அதிகமான ஆழம் கொண்டதாக இந்த புதைகுழி உருவாகியது.

இதன்போதே வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களும் புதைகுழிக்குள் விழுந்துள்ளது. எனினும் இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

கனமழையால் திடீரென புதைகுழி உருவாகி அதற்குள் கார்கள் சட்டென்று விழும் காட்சிகள் பதறவைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button