பலதும் பத்தும்

எனக்கு நோபல் பரிசு வேண்டாம்; டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

எனக்கு நோபல் வேண்டும் என அடம்பிடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் எனவும் , ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசுலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு, போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ”ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட 8 போர்களை நிறுத்தி உள்ளேன்.

ஆனால் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இப்போது அவர்கள், ‘ரஷ்யா மற்றும் யுக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்’ என்று சொல்கிறார்கள்.

நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button