இந்தியா

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் கொண்ட குழு நியமித்த காங்கிரஸ்

2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐவர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் அமைத்துள்ளதாக
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இந்த குழுவில்,அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் குழுச் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

இதனிடையே அணமைக் காலமாக காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கபோகிறது என
கருத்துக்கள் வெளிவந்தன.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பற்காக இந்த கூட்டணி மாற்றம் அமையும் என்றும் தகவல்கள் வெளியாகின.

செய்தியாளர்கள் சந்திப்புகளில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் இதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *