உலகம்

தென் ஆப்பிரிக்காவில் 20 ஆவது ஜி 20 உச்சி மாநாடு ஆரம்பம்

ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் ஊடாக பயணமானார்.

மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டில் ஜார்ஜியா இத்தாலி பிரதமர் மெலோனியையும் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *