பலதும் பத்தும்
விந்து கலந்து உணவு தயாரிக்கும் உணவகம்

உணவகமொன்று விந்து கலக்கப்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்றே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து அவ்வுணவகத்தின் உரிமையாளரும் பிரபல சமையல் நிபுணருமான டேவிட் முனோஸ் கருத்துத் தெரிவிக்கையில் ”எனது உணவகத்தின் உணவுப் பட்டியளில் மீனின் விந்துக்களினால் செய்யப்பட்ட உணவுகளை இணைக்கவுள்ளேன். பஃபர் ஃபிஷ், மாங்க் ஃபிஷ் மற்றும் காட் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் விந்துக்களைக் கொண்டே இந்த உணவுகள் தயாரிக்கப்படவுள்ளன.
ஜப்பானில் இது போன்ற உணவு வகைகள் சர்வ சாதாரணம்.அதை நான் சுவைத்துப் பார்த்துள்ளேன். அதனால் ஈர்க்கப்பட்டே இம் முடிவை எடுத்துள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
![]()