பலதும் பத்தும்

அச்சமூட்டும் விநோத உயிரினம்; பீதியில் மக்கள்

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் குளத்தில் அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட விசித்திர உயிரினமொன்றைக் கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இது பார்ப்பதற்கு முதலை போன்ற தலை மற்றும் கூர்மையான பற்களைக் கொண்டு காணப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ‘இவை அலிகேட்டர் கார்ஃபிஷ்‘ எனப்படும் மீன்கள் எனவும் இவை வட அமெரிக்காவில் அதிகளவில் காணப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவை எவ்வாறு இங்கு வந்துள்ளன என்பது குறித்து வனத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இவை ஏனைய மீன்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வல்லுனர்களின் கூற்றுப்படி, அலிகேட்டர் மீன்களின் ஆயுட்காலம் 18-20 ஆண்டுகள் இருக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button