கைத் துப்பாக்கி மறுப்பு; வாளுடன் அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்,தனது தற்காப்புக்கு கைத் துப்பாக்கி அல்லது மிளகு ஸ்ப்ரேயர்களை வழங்குமாறு விடுத்த கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாததால் தற்போது அவர் வாளுடன்(sword) செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் திணைக்களம் தனது பாதுகாப்புக்கு போதிய ஏற்பாட்டை செய்யாததால் அர்ச்சுனா எம்.பி.தற்போது வாளுடன் செல்வதாக அவர் கூறுவதா ‘சண்டே ரைம்ஸ்’தெரிவித்துள்ளது
வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள் (pepper spray) மற்றும் மிளகு தோட்டாக்களை கொண்டு வர அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ‘ஸ்பிரே’ செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு, தான் கொள்வனவு செய்த மிளகு ஸ்ப்ரேக்களை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், இலங்கை சுங்க விதிமுறைகளின்படி இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அங்கீகாரம் தேவை என்பதை வாங்கும் நேரத்தில் தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் எம்.பி.க்கு அச்சுறுத்தல் இருப்பதாக இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும், அது குறைந்தபட்ச ஆபத்து மட்டத்தில் உள்ளது என்றும், அக்டோபர் 23 திகதியிட்ட கடிதத்தில், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, அர்ச்சுனா எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி.உயிராபத்து இருப்பதாக நம்பகமான புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்தால், அத்தகைய எம்.பி.க்களுக்கு இலவச துப்பாக்கி உரிமத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை வழங்குவது குறித்து அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்தி, இந்த சாதனங்களைக் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சின் நேரடி ஒப்புதலைப் பெறுமாறு பதில் செயலாளர் நாயகம் எம்.பி.க்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே தனது பாதுகாப்பிற்காக ஒரு வாளை வைத்திருப்பதாகவும், அது எப்போதும் தனது காரில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
![]()