அப்பகஸ் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட அப்பகஸ் பரீட்சையில் சித்தி பெற்ற 261 மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 1 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு றோயல் கல்லூரியின் நவரஹகல மண்டபத்தில் தலைமை அதிகாரி டாக்டர் செந்தில் குமார் பெருமாளின் ஆலோசனைக்கமைய நிறுவனத்தின் உதவி இயக்குனர் ஷியாமளா கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிக படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட பரீட்சையில் கொழும்பு, ஹட்டன், சம்மாந்துறை, நோர்வூட், பதுளை, நாவலப்பிட்டி, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த விழாவில் பரிசில்கள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு அதிதிகள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்த அதேவேளை,கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.



![]()