துப்பாக்கி,ரவைக் கூடுகள் மீட்பு; யாழ்.பல்கலைக்கழகத்தில் முழுமையான சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற் கூரை பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இரண்டு துப்பாக்கி ரவைக் கூடுகளும்(மகசின்கள்) வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கின்றனவா எனக் கண்டறிய அப்பகுதியில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் மேல் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும் வயர்களும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்ற போதே வியாழக்கிழமை மாலை இவை அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.இதனையடுத்து நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் இந்தப் பொருட்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அங்கு பொலிஸாருடன் வந்த விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி ரவைக் கூடுகள் மற்றும் வயர்களையும் மீட்டுச் சென்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் கூரை பகுதியில் திருத்த வேலை இடம்பெற்ற நிலையில் அதன் அருகில் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் இரண்டு மகஸின்கள் , வயர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அப்பகுதியை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டு, மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூரை பகுதி முழுமையாக சோதனையிடப்பட்டது.
இதன்போது ரி56 ரக துப்பாக்கி, இரண்டு மகஸின்கள், மூன்று வெடிகுண்டுகள் , வயர்கள், ரிக்னேட்டர், மருத்துவ பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
![]()