பலதும் பத்தும்
நிலக்கரியை விட கூடுதலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் முதல் முறையாக, புதுப்பிக்கத்தக்க வலு சத்தியில் இருந்து உருவாக்கப்படும் மொத்த வலுசக்தி நிலக்கரியை விட அதிகமாக இருப்பதாக சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் (ISA) பணிப்பாளர் நாயகம் ஆஷிஷ் கன்னா தெரிவித்தார்.
புது டில்லியில் உள்ள பாரத் வலயத்தில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் 8 ஆவது அமர்வில் கன்னா இவ்வாறு தெரிவித்தார். சூரிய சக்தியின் விரைவான உலகளாவிய வளர்ச்சியை எடுத்துரைத்த கன்னா, “உலகம் 1000 ஜிகாவோர்ட் சூரிய சக்தி திறனை அடைய 25 ஆண்டுகள் ஆனது. ஆனால் இரண்டு ஆண்டுகளில், அடுத்த 1000 ஜிகாவோர்ட் எட்டப்பட்டுள்ளது” என்றார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த திறன் மீண்டும் இரட்டிப்பாகும் என்றும், “உலகளவில் 4600 ஜிகாவோர்ட் அடையும்” என்றும் கணிப்புகள் சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும்தெரிவித்தார்.
புதிய சூரிய சக்தி நிறுவல்களில் சுமார் 71 சதவீதம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடைபெறுவதாகவும், லத்தீன் அமெரிக்கா அடுத்த பெரிய வளர்ச்சி மையமாக உருவாகி வருவதாகவும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் பணிப்பாளர் நாயகம் கூறினார். ஆப்பிரிக்காவின் பயன்படுத்தப்படாத ஆற்றலையும் அவர் வலியுறுத்தினார், “இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத சிறந்த சூரிய கதிர்வீச்சைக் கொண்ட கண்டமாக ஆபிரிக்க உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
உலகளாவிய சூரிய சக்தி வசதி போன்ற முயற்சிகள் மூலம் தனியார் துறை முதலீட்டை அதிக அளவில் ஈர்க்க சர்வதேச சூரிய சக்தி கூட்டணி செயல்பட்டு வருவதாக கன்னா குறிப்பிட்டார். இது ஆசிய பசிபிக் பகுதிக்கு விரிவடைவதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளைத் தொடங்கும். உள்ளூர் தீர்வுகளை உருவாக்கவும் முதலீட்டு அபாயங்களைக் குறைக்கவும் நாடுகள் உதவுவதற்காக திறன் மேம்பாட்டிலும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
“சூரிய சக்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்ட ஒரு புதிய தொழில்நுட்ப வீதிவரைபடம் மற்றும் கொள்கையை நாங்கள் அமைத்து வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு பெரிய முயற்சியை அறிவித்த கன்னா, ஆப்பிரிக்க சூரிய சக்தி வசதி அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார். பெட்டரி சேமிப்பைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பிராந்திய இணைப்பு குறித்த புதிய திட்டத்திற்கான திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தினார்.
ஒரு முக்கியமான கனிம மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கழிவுகள் மற்றும் மீள்சுழற்சி பொருட்களை நிர்வகித்தல் உட்பட சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் கவனம் செலுத்தும் பகுதிகளை ஹன்னா மேலும் கோடிட்டுக் காட்டினார். “125 நாடுகளுக்கும் பகிரப்பட்ட தரநிலைகளை நோக்கி நாம் அனைவரும் எவ்வாறு செயல்பட முடியும் என்பது குறித்து இந்தியாவின் அனுபவத்தை பயன்படுத்தி தரநிலைகளை ஒத்திசைப்பது குறித்து ஆராய உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
125 உறுப்பு நாடுகளுக்கும் டிஜிட்டல் கற்றல் தீர்வுகளை வழங்குவதற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டணி அகாடமி மற்றும் உலகளாவிய திறன் மையத்தை நிறுவும் திட்டங்களையும் அவர் அறிவித்தார். “நீங்கள் எங்கிருந்தாலும், எந்த வருமான மட்டத்தில் இருந்தாலும், உங்கள் நாடுகளுக்கு சூரிய சக்தி என்ன செய்ய முடியும் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் அணுகலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
![]()