பலதும் பத்தும்

திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் விற்பனை

பன்னாட்டு கலாசாரங்களை கொண்டாடும் துபாயில் வருகிற 31ம் திகதி ஹாலோவீன் திருவிழாவுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கல்லறை, சவப்பெட்டி, எலும்புக்கூடும் மற்றும் பேய் வடிவிலான திகிலூட்டும் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பேசுபொருளாக மாறியுள்ளது

சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த சம்ஹைன் மதத்தை பின்பற்றும் மக்கள் கொண்டாடிய செல்டிக் அல்லது கெல்டிக் என்ற அறுவடை திருவிழாவில் இருந்து இந்த ஹாலோவீன் திருவிழா வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நாளானது கோடை காலத்தின் முடிவு என்றும், குளிர்காலத்தின் தொடக்கமாகவும் அன்றைய மக்கள் கருதினர். குறிப்பாக ஒளி குறைந்து இருள் பரவ தொடங்கும் காலம் என்பதால் இறந்தவர்கள் பேய்களாக அவர்களுடைய இடத்திற்கு வருவதாகவும், அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை சேதப்படுத்துவதாகவும் நம்பினர்.

எனவே தந்திர முறைகளை பயன்படுத்தி பயமுறுத்தி விளையாடுவது, பல்வேறு தீங்குகளை விளைவிப்பது போன்ற செயல்களை செய்தால் பேய்களை பதிலுக்கு பயம்காட்டி விரட்டலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதில் கல்லறைகளுக்கு சென்று பேய்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி அங்கு நெருப்பை மூட்டி பேய்களை விரட்டியடித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

தற்போது கடந்த சில ஆண்டுகளாக துபாயிலும் இந்த கொண்டாட்டம் களை கட்டி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button