பலதும் பத்தும்

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு கிடைத்த உயரிய விருதுகள்!

இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அண்மையில்  நடைபெற்றது.

இதன்போது நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award இனை பெற்றுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக விருதுவழங்கி வருகின்ற நிலையில்,இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த சமூக வலைத்தளத்திற்கான ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 இன் சமூக ஊடக வகைக்கு – அகில இலங்கை ரீதியாக நல்லூர் பிரதேச செயலகத்தின் முகப்புத்தகத்திற்கு மட்டும் Special Jury Award கிடைக்கப்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலகம் மட்டுமே தேசிய ரீதியில் ஓரே தடவையில் முதற்தடவையாக இவ் இரு விருதுகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி பிரதேச செயலாளரும் அவரது குழுவும் ஜனாதிபதியை சந்தித்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதியால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வழங்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button