இலங்கை

ஜகத் விதான எம்.பி.யை சுட்டுக் கொல்லச் சதி!; பொலிஸ்மா அதிபர் எழுதிய கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான ஜகத் விதாரண தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ,எம்.பி.க்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றை முன்வைத்த நிலையில், ஜகத் விதாரண எம்.பி. தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில்வருகையில்,

பொலிஸ் மா அதிபரிடமிருந்து களுத்துறை பகுதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருக்கும் இரகசிய தகவல் அறிக்கையில்,ஜகத் விதான வீட்டிலிருந்து வாகனத்தில் செல்லும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டு கொலையாளி தொடர்பான பெயர் விபரங்களை தெரிவித்து அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த இரகசிய கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.எனவே ஆகவே தாமதிக்காமல் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.எனது பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் .தாமதிக்காதீர்கள் என்றார்.

அடுத்ததாக முஸ்லி ம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம்.பி.யான எம்.எஸ். உதுமாலெப்பை தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பிரதி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகையில்,

பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரிடம் எமது பாதுகாப்பு தொடர்பான விடயங்களை முன்வைத்தோம்.எனக்கு விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அது சம்பந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் .பொலிஸுக்கு பொறுப்பான அமச்சரிடமும் முறையிட்டுள்ளேன் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளேன் ,ஜனாதிபதி கூட்டத்திற்கு வந்தபோதுகூட எங்களை பாதுகாக்குமாறு கோரினோம். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ,மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ,உயிரச்சுறுத்தல் உள்ள அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெகுவிரைவில் சபைக்கு அறிவிப்பார். எம்.பி.க்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *