கவிதைகள்
திருப்புகழ் பாடச் வைத்தவன் முருகன்!…. கந்தசஷ்டிச் சிந்தனை – 4 ம் நாள்…. ஜெயராமசர்மா

திருப்புகழ் பாடச் வைத்தவன் முருகன்
திருந்திட அருணகிரியைச் செய்தவன் முருகன்
திருப்புகழ் பாடினால் திருந்திடும் நாக்கு
திருப்புகழ் பாடுவோம் சிறந்திடும் வாழ்வு
மாம்பழம் முருகனை மாற்றியே விட்டது
மாம்பழம் அவனே சுவையும் அவனே
கதையினக் கேட்டுக் கலங்கிட வேண்டாம்
எல்லாம் இறையின் தத்துவம் ஆகும்
கணபதி கந்தனின் சோதரன் ஆவார்
கந்தனின் காதலில் கணபதி உதவினார்
கதையினைக் கதையாய் கேட்டிட வேண்டும்
விமர்சனம் செய்வது வீண்விளை வாகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()