கவிதைகள்

அரனார் மைந்தன் அழகன் முருகன்!….. கந்தசஷ்டிச் சிந்தனை – 3 ம் நாள்…. ஜெயராமசர்மா

ஆலயந் தோறும் அடியார் குவிவார்
அரனின் மைந்தனைப் பரவியே நிற்பார்
அகத்தில் இருக்கும் அழுக்குகள் அகல
அன்பாய் வேண்டி அனைவரும் நிற்பார்

அரக்க குணத்தை அழித்தவன் கந்தன்
இரக்க குணத்தில் நிறைவான் கந்தன்
உருக்க முடனே அழைத்தால் வருவான்
உண்மைப் பொருளே உமையின் மைந்தன்

வேலை ஏந்தினால் வினையை அறுப்பான்
வெற்றி கொடுப்பான் வீணரை ஒடுக்குவான்
அபயம் என்றால் அடைக்கலம் அளிப்பான்
அரனார் மைந்தன் அழகன் முருகன் !

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *