கவிதைகள்
தெள்ளு தமிழாய் விளங்கிறான் கந்தன்!…. கந்தசஷ்டிச் சிந்தனை – 2 ம் நாள்…. ஜெயராமசர்மா

மயிலில் ஏறி வருவான் கந்தன்
வள்ளியை அள்ளி அணைத்தான் கந்தன்
தெள்ளு தமிழாய் விளங்கிறான் கந்தன்
தெய்வானை உடனாய் இருப்பான் கந்தன்
அனைவரும் கந்தனை மனமதில் நினைக்க
கவசமாய் கந்த சஷ்டியைப் பிடிப்போம்
சஷ்டியைப் பிடித்தால் சகலதும் அகலும்
சஷ்டியே கந்தனின் இஷ்டமாம் விரதம்
பட்டினி கிடப்பது பக்குவம் கொடுக்கும்
சஷ்டியில் பட்டினி சகலதும் கொடுக்கும்
நீரும் அருந்தார் நினைப்பெலாம் கந்தனை
நினைத்துக் கொண்டே பிடிப்பார் விரதம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()