பலதும் பத்தும்

தினசரி 7,000 அடிகள் நடந்தால் போதும் – புதிய ஆய்வில் வெளியான தகவல்!

தினசரி 7,000 அடிகள் நடப்பது ஆரோக்கிய நன்மைகளைப் பெற போதுமானது என்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் (journal Lancet Public Health) வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நம்பப்பட்ட 10,000 அடிகள் இலக்கை விட, 7,000 அடிகள் நடப்பதே நாள்பட்ட ஆறு நோய்களின் அபாயத்தையும், அகால மரண அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 160,000 பெரியவர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், தினசரி 7,000 அடிகள் நடப்பது, இறப்பு அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. டிமென்ஷியா அபாயத்தை 38% குறைக்கிறது.

இருதய நோய் அபாயத்தை 25 சதவீதம் குறைக்கிறது. மேலும் டைப் 2 நீரிழிவு மற்றும் மனச்சோர்வு அபாயமும் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

7,000 அடிகளுக்கு மேல் நடப்பது, டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதை தவிர பெரிய நன்மைகளை வழங்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரோக்கிய நன்மைகளைப் பெற, உடனடியாக நடக்கத் தொடங்குவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள், பரிந்துரைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button