முச்சந்தி

பாதாள உலகக் கும்பல்கள் சட்டவிரோதமாகச் சேர்த்த 3902 கோடி ரூபாவுக்கு மேல் சொத்துக்கள் பறிக்கப்படும்!

2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களினால் சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட 3902 கோடி ரூபா மேல் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எப்.யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கைது செய்யப்படும் திட்டமிட்ட குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் தொடபிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதாவது 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் திட்டமிட்ட குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்களின் 3902 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை 2025ஆம் ஆண்டில் 73 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 354 பவுண் தங்கமும், 72 வாகனங்களும், 36 வீடுகளும், 37 ஏக்கர் காணியும் 67 ரூபா பணமும் அடங்கும். இவை சட்டவிரோமான முறையில் சேகரித்த பொருட்களாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி சட்டவிரோமான முறையில் பணம் சம்பாதிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *