உலகம்

பாகிஸ்தானுக்கான ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் – அமெரிக்கா மறுப்பு

பாகிஸ்தானுக்கு மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் திகதி வெளியான அமெரிக்க போர்த்துறை அறிவிப்பில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கான பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தவறான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் உண்மைக்கு புறம்பானது என்றும் இது ஏவுகணை பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் வழங்குவதற்கானது என்றும் அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *