பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை?; மஹிந்த மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பெரமுன கேள்வி

யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சரத் பொன்சேகாவுக்குப் பாடம் புகட்ட விரும்பும் இரண்டு விலங்குகளைப் பற்றி அவர் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு விலங்கு சிங்கம், மற்றொன்று தேவாங்கு. சிங்கத்திற்கும் தேவாங்கிற்குமிடையில் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சரத் பொன்சேகா உணர வேண்டும்.
சிங்கம் வயதானாலும் சரி, நோய்வாய்ப்பட்டாலும் சரி, அது ஒருபோதும் புல்லைத் தின்னாது. ஆனால் தேவாங்கு பொதுவாக இறைச்சி உண்ணும் விலங்காக அறியப்பட்டாலும், சில தேவாங்குகள் மரப்பட்டைகளைத் தின்னும். அது மாத்திரமின்றி அவை நாயாகிப் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் சிங்கம் ஒருபோதும் நாயாகிப் போவதில்லை என்ற உண்மையைத் சரத் பொன்சேகாவுக்கு நான் கூற விரும்புகிறேன்.
அவர் அடைந்திருக்கும் நிலையைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் அவர் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருந்தார்? தன்னைப் பொதுமக்களிடையே ஒரு வீரனாகக் காட்ட முயற்சிக்கும் அவர், மகிந்த ராஜபக்ஷவை ஒரு துரோகியாகக் காட்ட முயல்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தான் சுடப்பட்ட வாகனத்தை அவர் கூட்டங்கள் நடக்கும் இடமெல்லாம் கொண்டு சென்று பிரசாரம் செய்தார். ஆனால், அந்த ‘வீரரின்’ கூட்டத்தில் பங்கேற்க ஒரே ஒரு தனிநபர் மட்டுமே வந்து அமர்ந்திருந்தார், அவரிடம்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார். சமூகத்திலும் மக்கள் மத்தியிலும் தனக்குள்ள இடத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னரும், மக்கள் இப்போது தொடர்ச்சியாக அவரைப் பார்க்கச் செல்கிறார்கள்.
அவருடைய அந்த உரையில் மகிந்த ராஜபக்ஷவை இரு கால்களிலும் கட்டித் தொங்கவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
யுத்தம் முடிந்து குறுகிய காலத்துக்குள் நாட்டிலுள்ள முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்த சரத் பொன்சேக்காதான் இன்று இவ்வாறானதொரு கருத்தைக் கூறுகின்றார்.
இன்றும் நாட்டுக்கு மனித உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்குச் சரத் பொன்சேகாவின் அந்தக் கூற்றுதான் காரணம்.
யுத்தத்தை முடிப்பதற்கு முன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்று கூறி மகிந்த ராஜபக்ஷவை அவர் இப்போது வெறுப்புடன் திட்டுகிறார்.
அவர் வெளியிடும் பொய்க் கூற்றுகளைத் தவிர, யுத்தம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று அவருக்குத் தெரிந்திருந்தால், வெள்ளமுள்ளிவாய்க்கால் மோதல் நடந்துகொண்டிருந்தபோது அவர் எதற்காக சீனாவுக்குச் சென்றார்? யுத்தம் இவ்வளவு சீக்கிரம் முடிவடையும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர் இலங்கையில்தான் இருந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, சரத் பொன்சேகாவைத் தவிர, இன்று வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா, கமல் குணரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்றது அவர் தான். அப்படியென்றால் ஏன் அவர் மீது போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.
இன்றுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான போர்க்குற்றச்சாட்டாக வெள்ளைக் கொடி விவகாரமே உள்ளது. அதாவது இறுதி கட்ட போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுத்த செயலாகவே அமைந்தது.
மகிந்த ராஜபக்ஷவை இரு கால்களிலும் தொங்கவிட வேண்டும் என்று கூறிய இந்த மனிதனை எங்கே தொங்கவிட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
யுத்த வெற்றியின் முடிவில் அலரி மாளிகையில் கேக் வெட்டியபோது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேக்கை வெட்ட கொடுக்கவில்லை, சரத் பொன்சேகாவிடம்தான் கொடுத்தார்.
மகிந்த ராஜபக்ஷ அவ்வளவு நன்றியுணர்வுள்ள, கனிவான தலைவராவார். அடுத்தவர்களின் சாதனைகளைத் தனக்குச் சாதகமாக வரவு வைத்துக் கொள்ளாத தலைவர்.
ஒரு வீரன் துரோகியாக மாற அதிக நேரம் எடுக்காது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ‘பாலில் இட்டாலும் கரி வெள்ளையாகும் காலம் இல்லை, எவ்வளவு நன்மைகள் செய்தாலும் துரோகிகள் நல்லவர்களாக மாட்டார்கள்’ என்று ஒரு கவிதையிருக்கிறது. சரத் பொன்சேகாவும் அப்படியான ஒருவர்தான். தன் உயிரைக் காப்பாற்றிய, தன்னைப் பற்றி நாடே பேசும் தளபதி என்று சொல்லும் வாய்ப்பை வழங்கிய தலைவர்களை வெறுப்புடன் பேசும் இவரைப் பற்றி வேறு என்ன பேச முடியும்? என்றார்.
![]()
மதிப்புககுரிய சட்டத்தரணி திரு. .மனோஜ் கமகே அவர்களுக்கு
;ஒரு போரின் போது இருபக்க போர் வீரர்;கள் அதனை வழüநடத்திச் செல்லும் தளபதிகள் இருபக்க பொதுமக்கள் என காயம்படவும்,இறக்கவும் கூடும்.
ஆனால் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கெனால்லப்பட்டாலோ காணாமல் ஆக்கப்பட்டாலோ அது கொலை.அதுவும் இலங்கைப் போரில் சரணடைந்தவர்கள் தமிழர்கள் .அவர்களில் நடேசன்,புலித்தேவன் இது தவிர புதுவை இரத்தினதுரை எங்கேலுயோகி எங்கே.
அரச பார்வையில் அவர்கள் பயங்கரவாதிகள் .சரி அவர்கள் பயங்கரவாதிகளாகவே இருக்கட்டும்.ஆனால் சரணடைந்தவர்களைக் கொல்லக்கூடாது என்ற சர்வதேச போர்ச்சட்டம் மனித உரிமைகள் சட்டம் இருக்கின்றதே அதைத்தானே இராணுவ அதிகாரிகள் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்கள் இனத்தால் தமிழர்கள்.அதனால் ஒருவரே இருவரோ அல்லது ஆயிரக்கணக்கானவரோ அவர்களை போரல்லாத சூழ்நிலையிலோ அல்லது சரணடைந்த நிலையில் இன வெறுப்போடு கொலை செய்யப்பட்டால் அதற்குப் பெயர் இனப்படுகொலை.
சரத் பொன்சேகா பிரபாகரனைக் கொன்றது போரின் போது நடேசனைக் கொன்றது சரணடைந்த போது எனவே ஒரேயொருவர் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டாலும் அது தமிழனப் படுகொலையே.
அதனால் போர்கஆகள நிலவர ஆயு;வின்படி சரத் பொன்சேகா ஒரு தளபதியாக மட்டுமே செயல்பட்டார்.ஆனால் சவேந்திர சில்வா இலங்கை மக்களுக்கான இரணடாம்நிலைத் தளபதியென்பதை மறந்து இனக்குரோதத்துடன் சரணடைந்தவர்களைக் கொன்றதால் அவருக்குத் தடை விதித்தது சரியே