இந்தியா

தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது – விதிகளில் தளர்வு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள்.

இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை இராணுவம், பொலிஸார் இணைந்து மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால், சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் மொத்தம் நான்கு ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *