உலகம்
ரஷ்ய ஜனாதிபதி -இந்திய பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல் ; பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ( 7) பேசியுள்ளார்.
புட்டினின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த மோடி, புட்டினின் இந்திய வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையிலான ஆண்டிறுதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டிசம்பர் முதல் வாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த சந்திப்பில், வணிகம், இராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
![]()