உலகம்

போர் முடிவுக்கு வருகிறதா? பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிப்பு

இந்நிலையில் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருமா என உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை தொடர்ந்து. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதில், 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார்.

அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப். நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது.

இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதுடன், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான சாத்தியமும் அதிகரித்தது. 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்த நிலையில் நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது.

இதனிடையே டிரம்ப் அறிவித்த சமரச திட்டத்தை ஏற்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தபோதும், காசா மீதான தாக்குதலை கைவிடவில்லை. சமரச திட்டத்தை ஏற்று போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் காலக்கெடுவை நிர்ணயித்தார்.

அவ்வாறு செய்யாவிட்டால் ஹமாஸ் தாக்குதல்களைச் சந்திக்கும் என்று அச்சுறுத்தினார். இந்நிலையில் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *