இலங்கை

நினைவுநாள் நிகழ்வில் குழப்பம் விளைவித்த நபர்; பொதுமக்களால் விரட்டி பிடிக்கப்பட்ட காட்சி!

யாழ்ப்பாணம் – நல்லூரில் இடம்பெற்ற நினைவு நாள் இறுதி நிகழ்வில் குழப்பம் விளைவித்த நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களால் விரட்டிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

நினைவுநாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் நபரொருவர் அங்கு சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் சில செயற்பாடுகளை செய்துள்ளார்.

அரசியல் கட்சிக்கான வேண்டுகோள் என்று எழுதப்பட்ட விளம்பரமொன்றை கொடுத்துக்கொண்டே அவர் குழப்பம் விளைவித்தார்.

அதன்பின்னர் குறித்த நபரை அங்கிருந்த மக்கள் இணைந்து பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.

அவரைப் பிடித்து விசாரித்த வேளையில் காசு கொடுத்ததால் விளம்பரம் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் நினைவுநாள் நிகழ்வுப் பகுதியில் சற்றுநேரம் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் குறித்த நபரை எச்சரித்து மக்கள் அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *