உலகம்

வாகனங்கள் பயணித்த போது திடீரென நொருங்கிய சாலை; அலறியோடிய பயணிகள்- தாய்லாந்தில் பயங்கரம்!

வாகனங்கள் பயணித்த போது திடீரென நொருங்கிய சாலை; அலறியோடிய பயணிகள்- தாய்லாந்தில் பயங்கரம்!

வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்த போதே சாலையொன்று திடீரென உடைந்து நொருங்கியுள்ளது.

தாய்லாந்தின் சாலை ஒன்றிலேயே இந்தப் பயங்கர சம்பவம் பதிவாகியுள்ளது.

தாய்லாந்தின் குறிப்பிடப்பட்ட சாலையொன்றில் கார், மோட்டார்சைக்கிள் வான் உள்ளிட்ட வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தன.

அதன்போது திடீரென சாலையின் நடுப்பகுதி உடைய ஆரம்பித்துள்ளது. அதனை அவதானித்த பயணிகள் வாகனங்களையும் நிறுத்தி விட்டு உடனே அலறியடித்து ஓடினர்.

உடைய ஆரம்பித்த சாலையின் நடுப்பகுதி முழுவதுமாக நொருங்கியது. இதனால் சாலையை ஒத்த கட்டடங்களும், அதற்கு அருகிலிருந்த மின்கம்பங்களும் உடைந்து நொருங்கியுள்ளன.

சாலை உடைந்து நொருங்கியதன் பின்னர் அங்கு ராட்சத பள்ளம் உருவாகியது. சாலைக்கு அடியே செல்லும் பைப் உடைந்தததன் காரணமாகவே திடீரென சாலை உடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சாலை உடைந்து நொருங்கிய போது விபத்துக்கள் பதிவானதா? இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

எனினும் சாலை உடையும் போது அங்கு ஒரு கார் சிக்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

சாலை உடைந்து நொருங்கி ராட்சத பள்ளம் உருவாகிய சம்பவம் தாய்லாந்தை ஒரு கணம் அதிர வைத்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *