அரசியல் செய்வதற்காக சுமந்திரன் பொய்களை கூறக்கூடாது

அரசியல் செய்வதற்காக சுமந்திரன் பொய்களை கூறக்கூடாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வடக்கிலுள்ள உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எதுவும் கூறப்படுவதில்லையென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்(சுமந்திரன்) பொய்களையே கூறுகின்றார். இங்கு இப்போதும் பிரதேச சபைகளின் தலைவர்கள், நகர சபைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர்தானே. அரசியலுக்காக சுமந்திரன் எதனையாவது கூறுகின்றார். ஆனால் அவர் இவ்வாறு பொய் கூறுவது சரியில்லை என்றார்.
![]()