இலங்கை

திலீபனை நினைவு கூரத் தடையில்லை; அமைச்சர் பிமல் தெரிவிப்பு 

தமது உறவினர்கள், சமூக மற்றும் கலாச்சார தலைவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தியாகதீபம் திலீபன் உள்ளிட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கிலும், தெற்கிலும் மக்களுக்கு தங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக, கலாச்சார தலைவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அது தொடர்பில் எவ்வித தடைகளும், இடையூறும் கிடையாது. ஒரு பக்கத்தில் இதுவொரு கலாச்சார உரிமை என்பதுடன் மறுபக்கத்தில் அது அரசியல் உரிமையாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *