முச்சந்தி

நேபாள புதிய பிரதமர் இந்தியாவில் கல்வி கற்றவர்: ஊழல்களை அகற்றிய நீதிபதி சுஷிலா கார்கி!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அச்சமற்ற தீர்ப்புகள், ஊழலை எதிர்த்து நேபாள மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சரையே சிறையில் அடைத்தது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மூலம் அச்சமற்றவர் என மக்களிடம் பெயர் பெற்றவர்.
அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்குள் அதாவது 2017ஆம் ஆண்டு அவரைப் பதவி நீக்கம் செய்தனர்)
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.
ராணுவ தளபதி பேச்சுவார்த்தை:
நேபாளத்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்களுடன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
நேபாளத்தில் நெப்போ பேபி என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இதன் எதிர்விளைவாக பேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5ம் திகதி முடக்கியது. இதனால் நேபாளம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த நாட்டு நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், பிரதமர், அதிபர், மூத்த அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுவரை 54 பேர் உயிரிழந்தனர்.
போராட்டம் வலுவடைந்ததால் அதிபர் ராம் சந்திர பவுடால், பிரதமர் சர்மா ஒலி அடுத்தடுத்து பதவி விலகினர். நாட்டின் பாதுகாப்பை ராணுவம் ஏற்று, நேபாளம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக நேபாளத்தில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக 12க்கும் மேற்பட்ட போராட்ட குழுக்களுடன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
நேபாள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைவர் குல் மேன் கிசிங், காத்மாண்டு மேயர் பலேந்திர ஷா, தரன் நகர மேயர் ஹர்கா சம்பாங் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
சுஷிலா கார்கி அளித்த பேட்டியில், “Gen-Z குழு அரசாங்கத்தை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டின் நலன் கருதி அந்தப் பணியை ஆற்ற நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கல்வி கற்றவர்:
ஏற்கனவே அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண் என்ற வரலாற்றைக் கொண்டிருந்த சுஷிலா கார்கி தற்போது, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெறுகிறார்.
அவர் 1975ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
தற்போது இந்தியத் தலைவர்களால் தான் ஈர்க்கப்பட்டது உள்ளிட்டவற்றைக் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட அவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தை மறக்க முடியாது என்றும் கூறினார். இந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பலரும் என் நினைவில் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் பழமையான இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக உள்ளது. இந்தியா, நேபாளத்திற்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்தியர்கள் எப்போதும் நேபாளத்தின் நலம் விரும்புவார்கள்.
இந்தியத் தலைவர்களைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்திய நண்பர்கள் என்னைச் சகோதரியைப் போல்தான் நடத்தினார்கள். பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
பிரதமர் சுஷிலா கார்கி யார்?
நேபாளத்தில் பிறந்த சுஷிலா கார்கி முதலில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றி, 2016ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரலாறு படைத்தவர் சுஷிலா கார்கி.
அச்சமற்ற தீர்ப்புகள், ஊழலைப் பொறுத்துக்கொள்ளாததற்காக நேபாள மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சரையே சிறையில் அடைத்தது உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் மூலம் அச்சமற்றவர் என மக்களிடம் பெயர் பெற்றவர்.
இதனால், அரசுடன் கடுமையான மோதலையும் அவர் சந்தித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்குள் அதாவது 2017ஆம் ஆண்டு அவரைப் பதவி நீக்கம் செய்யத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Gen-Z போராட்டம்:
“Gen-Z குழு அரசாங்கத்தை வழிநடத்த ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியதால், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அங்கு ராணுவம் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதனையடுத்து அமைதி திரும்பியுள்ள நேபாளத்தில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணொளி வாயிலாகக் கூடி நாட்டின் இடைக்காலத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என விவாதித்தனர்.
தற்போது நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வுக்கு அருகே சுசிவபுரியில் உள்ள ராணுவ தளத்​தில் பதவி வில​கிய பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் பாது​காப்​பாக தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர்.
மேலும் போராட்​டங்​களின்​போது தலைநகர் காத்​மாண்டு உட்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள சிறை​களில் இருந்து 13,000 கைதி​கள் தப்​பியோடி விட்​டனர். இதில் சுமார் 1,400 பேர் மட்​டும் பிடிபட்டு உள்​ளனர். இந்த சூழலில் நேபாளத்​தில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைய முயன்ற 60 கைதி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.
2026 மார்ச் 4 பொதுத் தேர்தல்:
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு இளம் போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றதும் கார்கி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 4 அன்று புதிய பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுத் தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவசரநிலையை அமல்படுத்தவும் கார்கி பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *