முச்சந்தி

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு 15 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் நான்காம் திகதி நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில் நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நிதி நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது முகாமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு ஐந்து லட்சம் ரூபா வீதம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *